Home சினிமா மகேஷ் பாபு – ராஜமௌலியின் வாரணாசி படத்தின் கதை இதுதானா? பிரம்மாண்ட டீசரில் கிடைத்த தகவல்

மகேஷ் பாபு – ராஜமௌலியின் வாரணாசி படத்தின் கதை இதுதானா? பிரம்மாண்ட டீசரில் கிடைத்த தகவல்

0

வாரணாசி

பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் வாரணாசி. இப்படத்தில் பிரியங்கா சோப்ரா மற்றும் பிரித்விராஜ் நடித்துள்ளனர். கீரவாணி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தின் டைட்டில் டீசர் நேற்று பிரம்மாண்டமாக முறையில் வெளியிடப்பட்டது. அதன்படி, இப்படத்திற்கு வாரணாசி என தலைப்பு வைத்துள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

ஆனால், இந்த தலைப்பை விட, அந்த வீடியோ அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த பிரம்மாண்ட டீசர் மூலம் படத்தின் கதைக்களம் இப்படித்தான் இருக்கும் என சூசகமாக ராஜமௌலி கூறியுள்ளார்.

வாரணாசி கதை இதுதானா

இந்த நிலையில், வாரணாசி எப்படிப்பட்ட கதையாக இருக்கும் என்பது குறித்து ஒருசில கணிப்புகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

.

இந்த படம் இந்து புராணங்கள் மற்றும் டைம் ட்ராவல் போன்ற அம்சங்களைக் கொண்ட ஒரு சாகச படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், டீசரில் வெவ்வேறு காலகட்டத்தில் காட்டப்பட்டுள்ளது.

வாரணாசி 512CE, எரிகல் விழும் காட்சி 2027CE, இலங்கை நகரம் 7200BCE என ஒவ்வொரு காலகட்டத்தை காட்டியுள்ளார்.

இதில் கதாநாயகனான மகேஷ் பாபு, வில்லன் பிரித்விராஜ் ஆகிய இருவருக்கும் ஒவ்வொரு காலகட்டத்திலும் மோதல் ஏற்படும் என கூறப்படுகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இருவருக்கும் வெவ்வேறு ஆட்களாக பிறந்து, தங்களுடைய நோக்கத்தை அறிந்து, அதனை நோக்கி பயணிப்பவர்களாக இருக்கலாம் என்கின்றனர்.

கிட்டதட்ட கங்குவா மற்றும் அனேகன் போன்ற படங்களின் கதைக்களம் போல் வாரணாசி இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், இதுதான் வாரணாசி படத்தின் கதை என உறுதியாக கூறமுடியாது.

NO COMMENTS

Exit mobile version