Home இலங்கை சமூகம் கோப்பாய் பொலிஸாருடன் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் கலந்துரையாடல்

கோப்பாய் பொலிஸாருடன் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் கலந்துரையாடல்

0

நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் கோப்பாய் பொலிஸாருடன் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

கோப்பாய் பிரதேசத்தில் நடைபெறும் குற்றச்செயல்கள் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கும் போது அந்த தகவல்கள் சந்தேகநபர்களுக்கு சொல்லப்படுவதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

குற்றச்செயல்களை கட்டுப்படுத்த வேண்டிய பொலிஸாரே சந்தேகநபர்களுக்கு தகவல்களை வழங்குவதால் பொதுமக்கள் பொலிஸாரிடம் செல்ல அச்சப்படும் சூழல் காணப்படுகிறது.

குற்றச்செயல்கள் தொடர்பாக  நடவடிக்கை

இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் குற்றச்செயல்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் எதிர்காலத்தில் இதுபோன்ற விடயங்கள் நடைபெறக்கூடாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினரால் பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், கோப்பாய் பிரதேச அமைப்பாளர் தோழர் விவேக், பிரதேச சபை உறுப்பினர் கஜீபன் தோழர் மற்றும் ஏனைய பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.  

NO COMMENTS

Exit mobile version