கூலி
ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் திரைப்படம் கூலி. வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி இப்படம் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் – ரஜினிகாந்த் முதல் முறையாக கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சௌபின் சாஹிர், நாகர்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் படம் என்றால் ஆக்ஷனுக்கு பஞ்சம் இருக்காது.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க
அதே போல் தான் கூலி திரைப்படமும் அமைந்துள்ளது. இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய லோகேஷ், படத்தின் முதல் பாதி எமோஷ்னல் ட்ராமாவாக இருக்கும் என்றும், இடைவேளை காட்சியில் ரஜினியின் Trasformation நடக்கும் என்றும், அதன்பின் முழுக்க முழுக்க ஆக்ஷன்தான் என கூறியிருக்கிறார்.
கூலி படத்தின் கதை
இந்த நிலையில், கூலி திரைப்படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கடந்த கால தவறுகளை சரிசெய்து, தனது இடத்தை வடிவமைக்கும் ஒரு மனிதனின் இடைவிடாத பழிவாங்கும் தேடல் தான் கூலி படத்தின் கதை என கூறப்படுகிறது.
இதில் ஆக்ஷன் மற்றும் எமோஷ்னல் ட்ராமாவை தனது ஸ்டைலில் லோகேஷ் கனகராஜ் வடிவமைத்துள்ளது எப்படி வந்துள்ளது என்பதை பொறுத்திருந்து ஏப்ரல் 14ம் தேதி திரையரங்கில் பார்ப்போம்.
