ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த், தமிழ் சினிமா இல்லை இந்திய சினிமா பெருமையாக கொண்டாடும் பிரபலம்.
கடைசியாக இவரது நடிப்பில் வேட்டையன் படம் வெளியாகி இருந்தது, ஆனால் படம் ஜெயிலர் பட வெற்றி அளவிற்கு பெரியதாக ஓடவில்லை.
இப்படத்திற்கு சரியாக விமர்சனங்கள் கொடுக்காததே வேட்டையன் சரியாக ஓடாததற்கு காரணம் என இயக்குனர் வருத்தம் தெரிவித்து இருந்தார். தற்போது ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார்.
சொத்தை பிரித்துக்கொடுக்க கேட்ட மனோஜ், ரோஹினி பக்கம் திரும்பிய பிரச்சனை… அப்படி என்ன ஆனது, சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ
பிட்னஸ் சீக்ரெட்
தன்னுடைய உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள தினமும் அரைமணி நேரமாவது எளிமையான யோகா, அரை மணிநேரம் நடை பயிற்சி செய்கிறாராம்.
தன்னுடைய பண்ணை வீட்டில் செடிகளை பராமரித்து கொண்டு அவற்றை பார்த்து கொண்டே நடப்பது மிகவும் பிடிக்குமாம்.
எனவே படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தன்னுடைய பண்ணை வீட்டிற்கு குடும்பத்தினரோடு அல்லது தனியாக சென்று விடுவார்.
அதோடு தனது உணவில் ஃபாஸ்ட் ஃபுட், மயோனைஸ், அசைவ கொழுப்புகள் உணவுகள், வெள்ளை சர்க்கரை, வெள்ளை உப்பு, செயற்கை இனிப்புகள் என முற்றிலும் தவிர்த்துள்ளாராம்.
தன்னுடைய உணவில் பழங்கள், காய்கறிகள், புரொட்டீனு நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வாராம்.