Home இலங்கை அரசியல் கைதாக போகும் அடுத்த முக்கிய புள்ளி!

கைதாக போகும் அடுத்த முக்கிய புள்ளி!

0

இலஞ்ச ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை சந்தேக நபராகப் பெயரிட்டு கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட கடற்றொழில் துறைமுக சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே இன்றையதினம்(27) நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

இதன்போதே, இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகள் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளித்துள்ளனர்.

கைது நடவடிக்கைகள்

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட உபாலி லியனகே, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.

முன்னதாக ஸ்ரீ லங்கன் விமான சேவையின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மைத்துனருமான நிஷாந்த விக்ரமசிங்கவை இன்று காலை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் – அனாதி

NO COMMENTS

Exit mobile version