எனது தந்தை நிச்சயம் வருவார். வரலாறு அவரை விடுதலை செய்யும் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகன் சதுர சேனாரத்ன (Rajitha Senaratne) தெரித்துள்ளார்.
நீதிமன்ற வளாகத்தில் நேற்று (18.07.2025) கருத்து வெளியிடுகையிலேயே ராஜிதவின் மகன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தன்னைக் கைது செய்வதைத்
தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சார்பில் தாக்கல்
செய்யப்பட்ட முன் பிணை மனு கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் நேற்று
நிராகரிக்கப்பட்டது.
அரசாங்கத்தை நிச்சயமாக கவிழ்ப்போம்
மனுதாரரின் சட்டத்தரணிகள் மற்றும் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் சமர்ப்பித்த சமர்ப்பிப்புகளை பரிசீலித்த பின்னர், கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதேவேளை தனது தந்தை ராஜித் சேனாரத்ன கைது செய்யப்பட்டாலும் இல்லாவிட்டாலும் தற்போதைய அரசாங்கம் கவிழ்க்கப்படுவது உறுதி என சதுர சேனாரத்ன தெரிவித்திருந்தார்,
அத்துடன் இந்த அரசாங்கத்தை நாங்கள் நிச்சயமாக கவிழ்ப்போம். என் தந்தை கைது செய்யப்பட்டாலும் இல்லாவிட்டாலும் இந்த அரசாங்கம் கவிழ்க்கப்படும் என எச்சரித்திருந்தார்.
கடந்தவாரம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது சதுர சேனாரத்ன இந்தக் கருத்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
