Home இலங்கை அரசியல் கைது செய்யப்படுவதை தவிர்த்த ராஜித சேனாரட்ன

கைது செய்யப்படுவதை தவிர்த்த ராஜித சேனாரட்ன

0

அம்பாந்தோட்டை கிரிந்த கடற்றொழில் துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்ட மோசடி
தொடர்பில், நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித
சேனாரட்ன, கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவில்லை.

உடல் நலக்குறைவு காரணமாகவே அவர் முன்னிலையாகவில்லை என்று அவரின் சட்டத்தரணி
கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

பாரிய நிதி இழப்பு

இந்தநிலையில் அவர் ஆணைக்குழுவில் எப்போது முன்னிலையாவார் என்ற தகவல்
வெளியாகவில்லை.

முறையான கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றாமல் அவர் கிரிந்த கடற்றொழில் துறைமுகத்தின் மணல் அகழ்வு திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு வழங்கியதாகவே
குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இலங்கை அரசுக்கு பாரிய நிதி இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம்
சாட்டப்பட்டுள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நேற்று அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தால் நீதிமன்ற சமர்ப்பிப்பு
அடிப்படையில் கைது செய்யப்படக்கூடிய வாய்ப்புக்கள் இருந்தன என்று ஆணைக்குழு
தரப்புகள் தெரிவித்துள்ளன.

NO COMMENTS

Exit mobile version