Home இலங்கை அரசியல் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளித்து பிரித்தானிய தமிழ் தேசிய அமைப்புக்களினால் ஊர்திப் பேரணி!

தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளித்து பிரித்தானிய தமிழ் தேசிய அமைப்புக்களினால் ஊர்திப் பேரணி!

0

தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்துடன்
பிரித்தானிய தமிழ் தேசிய அமைப்புக்களினால் ஊர்தி எழுச்சிப்பயணம் ஒன்று  நடாத்தப்பட்டுள்ளது.

குறித்த ஊர்தி எழுச்சிப்பயணமானது, “நாமும் இணைந்தால் பலமே” என்ற
தொனிப்பொருளில் தியாக தீபம் திலீபன் நோன்பிருந்த ஆரம்ப நாளான நேற்று (15)
முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஊர்தி எழுச்சிப்பயணம்

இந்தநிலையில், தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு கோரும் குறித்த பயணமானது
பிரித்தானியாவில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளிலிருந்து
ஆரம்பிக்கப்பட்டு  “Roxeth recreation ground Ha2 8LF South Harrow
” இப்பயணம் நிறைவடைந்துள்ளது.

இதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரித்தானிய கிளையின் முக்கியஸ்தர்
திரு.கேதீஸ்வரன் தலைமையில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version