கேம் சேஞ்சர்
தெலுங்கில் தயாரான ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு ராம் சரண் நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் கேம் சேஞ்சர்.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், சுனில் என பலர் நடித்துள்ளனர்.
ரூ. 450 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஒரு பாடலுக்கு மட்டுமே ரூ. 95 கோடி செலவு செய்திருக்கிறார்கள்.
சம்பளம்
இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த படத்திற்காக ராம் சரண் கடின உழைப்பை போட்டுள்ளார். அதற்கு ஏற்ற பலனாக ரசிகர்களும் படத்தை கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.
இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் ராம் சரண் இந்த படத்திற்காக ரூ. 65 கோடி சம்பளம் பெற்றுள்ளாராம். மற்ற படங்களுக்கு ராம் சரண் ரூ. 100 கோடி வரை சம்பளம் பெற்றிருக்கிறார்.