Home இந்தியா மோடியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த ராம் நாத் கோவிந்த்

மோடியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த ராம் நாத் கோவிந்த்

0

மூன்றாவது தடவையாக இந்தியாவின் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட நரேந்திர மோடிக்கு (Narendra Modi) இந்தியாவின் முன்னாள் அதிபர் ராம் நாத் கோவிந்த் (Ram Nath Kovind) வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி (Varanasi) தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பிரதமர் மோடி, 6,12,970 வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மோடியை ராம் நாத் கோவிந்த் வாழ்த்தியுள்ளார்.

மோடி பிரதமராக பதவியேற்கும் திகதி மாற்றம்: வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு

மோடிக்கு வாழ்த்து

இதனையடுத்து இந்தியாவின் முன்னாள் அதிபர் தனது முகப்புத்தக பதிவில், “நரேந்திர மோடி, உங்கள் தலைமையின் மீது இந்தியர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை கடந்த 60 ஆண்டுகளில் இல்லாது இந்த மூன்றாவது ஆணையில் பிரதிபலிக்கிறது.

எனவே, பாரதத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடர்ந்து பணியாற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தியாவின் (India) பிரதமராக நரேந்திர மோடி (Narendra Modi )எதிர்வரும் 9ஆம் திகதியன்று சத்தியபிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளதாக பாரதீய ஜனதாக்கட்சி இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

கனடாவில் வீட்டு வாடகை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version