தேர்தலை ஒத்திவைப்பதற்காக முட்டாள்தனமான செயலை செய்தால் அதுவே ஐக்கிய தேசியக் கட்சியின் முடிவாகும் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksha) இன்று (11) பதுளை(badulla)யில் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்
‘இப்போது பெரமுன குறித்து நாட்டு மக்களிடம் பெரும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அது உடைந்து போனாலும் நாம் எதையும் இழக்கவில்லை. அன்று இருந்ததை விட இன்று நாம் பலமாக இருக்கிறோம்.
தமிழ் மக்களை ஏமாற்றும் சஜித் : சோபித தேரர் கொந்தளிப்பு
தேர்தலை ஒத்திவைக்க முடியாது
தேர்தல் இல்லாமல் இருக்க முடியாது. அரசியலமைப்பின் படி தேர்தலை ஒத்திவைக்க முடியாது.அரசியலமைப்புக்கு முரணாக ஐக்கிய தேசியக் கட்சி இவ்வாறான முட்டாள்தனமான செயலை செய்யும் என நான் நினைக்கவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சி அவ்வாறானதொரு செயலைச் செய்தால் அது ஐக்கிய தேசியக் கட்சியின் முடிவாகும்.
தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு 13ஆவது திருத்தம் தீர்வாக அமையாது: இடித்துரைத்த சுமந்திரன்
எமது அதிபர் வேட்பாளர் குறித்து
எமது அதிபர் வேட்பாளர் குறித்து தற்போது எதுவும் கூறமாட்டோம். சரியான நேரத்தில் சொல்வோம். மக்கள் இப்போது பெரமுனவை வெல்ல வைப்பதற்காக காத்திருக்கிறார்கள். மக்கள் கட்சிகளைத் தவிர வேறு எதையும் தேடவில்லை என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |