Home இலங்கை அரசியல் இந்தியா – இலங்கை இடையிலான பாலம் : அநுர அரசின் நிலைப்பாடு

இந்தியா – இலங்கை இடையிலான பாலம் : அநுர அரசின் நிலைப்பாடு

0

இந்தியாவுக்கும் (India) இலங்கைக்கும் (Sri Lanka) இடையில் பாலம் அமைப்பது தொடர்பில் அநுர அரசங்கத்துக்கு இணக்கம் இல்லையா என்பது எங்களுக்கு தெரியாது என ரிஷாட் பதியுதீன் (Rishad Bathiudeen) தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த அரசாங்கங்கள் இது தொடர்பில் இணக்கப்பாடு கண்டபோதும் அது கைகூடவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (22) இடம்பெற்ற கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் 2 ஆம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் இந்திய விஜயம்

அவர் மேலும் தெரிவிக்கையில், ”எமது அண்டை நாடான இந்தியா எப்போதும் எங்களுக்கு உதவி செய்யும் நாடாகும். ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போதான அறிவிப்பில் இந்தியாவுடனான பாலம் அமைப்பது தொடர்பான எந்த இணக்கப்பாடும் காணப்படவில்லை.

ஆனால் கடந்த காலங்களில் இருந்த அரசாங்கங்கள் இந்தியாவுக்கு இலங்கைக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பில் இணக்கப்பாடு காணப்பட்டது. ஆனால் அது தற்போது கைவிடப்பட்டதா அல்லது இந்த அரசங்கத்துக்கு அது தொடர்பில் இணக்கம் இல்லையா என எங்களுக்கு தெரியாது.

எமது நாடு வீழ்ச்சியடைந்தபோது 4 பில்லியன் டொலர் கொடுத்து நாட்டை பாதுகாத்தது இந்தியாவாகும். இந்தியா அன்று எங்களுக்கு அந்த உதவியை செய்திருக்காவிட்டால் எமது நாடு வீச்சியடைந்திருக்கும்.

இலங்கையின் சுற்றுலாத்துறை 

அதனால் நங்கள் அந்த மக்களுடன் எமது நட்டை இணைக்கும்போது எமது நட்டின் பொருளாதாரம் மேம்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. உலக நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரக்கூடிய வாய்ப்பு அதிகரிக்கிறது.

இந்தியாவை இலங்கையையும் இணைக்கும் இந்த பாலம் அமைக்கும்போது வடக்கு கிழக்கு பிரதேசங்கள் சுற்றுலா துறை மூலம் அபிவிருத்தியடையும்.

மேலும் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) அமைச்சராக இருந்து நிர்மாணித்து கொடுக்கப்பட்ட வீடுகள் இன்னும் பூரணப்படுத்தப்படாமல் இருக்கின்றன. மாவட்ட கூட்டங்களின்போது மக்கள் அந்த வீடுகளை பூர்த்தி செய்து தருமாறே கேட்கின்றனர்.

அதனால் கோட்டபாய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) செய்த தவறை இந்த அரசாங்கம் செய்யக்கூடாது. அதனால் அந்த வீடுகள் தொடர்பில் மதிப்பீடு மேற்கொண்டு அவற்றை பூரணப்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version