Home இலங்கை அரசியல் வடக்கில் இராணுவம் நடத்தும் சிகையலங்கார நிலையங்கள்! அர்ச்சுனா எம்.பி விசனம்

வடக்கில் இராணுவம் நடத்தும் சிகையலங்கார நிலையங்கள்! அர்ச்சுனா எம்.பி விசனம்

0

தலையில் மயிர் இல்லாத அமைச்சர் ஒருவர் வடக்கில் ஒரே ஒரு சிகையலங்கார நிலையம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரால் நடத்தப்படும் ஒரே ஒரு சிகையலங்கார நிலையம் மட்டுமே வடக்கில் இருப்பதாக நாடாளுமன்றத்தில் பொய்யான தகவல்களை கூறியதாக அர்ச்சுனா ராமநாதன் எம்.பி குற்றம்சாட்டினார்.

ஓதுக்கீட்டு சட்டமூலத்தின்-2026 க்கான குழுநிலை விவாதத்தில் நடைபெற்ற வலுசக்தி அமைச்சுக்கான ஒதுக்கீட்டு விவாதத்தில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.

வடக்கில் 14 சலூன்கள்

தொடர்ந்து பேசிய அவர்,

அந்த அமைச்சருக்கு சவால் விடுகிறேன்,வடக்கில் 14 சிகையலங்கார நிலையங்கள் இருக்கிறது.அது பொய்யான தகவல் என்றால் நான் நாடாளுமன்றத்தை விட்டு செல்வேன்.அவ்வாறு இல்லை என்றால் அவர் தனது மனைவியுடன் நாடளுமன்றத்தை விட்டு வெளியேற வேண்டும்.

இராணுவம் சிகையலங்கார நிலையம் நடத்துவது பிழை என்று சொல்லவில்லை.இவர்களுக்கு தலைமயில் இல்லை என்பதால் சிகையலங்கார நிலையம் தேவைப்படாது.ஆனால் சாதாரண மனிதர்கள் ஒரு மாதத்திற்கு ஒரு முறையே தலைமயிர் வெட்டுக்கின்றனர்.

200 பேர் இருக்கும் இடத்தில் இராணுவம் ஒரு சிகையலங்கார நிலையங்களை போட்டுக் கொண்டால் மற்றையவர்கள் எவ்வாறு தொழில் நடத்துவது என்றார்.

NO COMMENTS

Exit mobile version