Home சினிமா நடிகை ரம்யா கிருஷ்ணனின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

நடிகை ரம்யா கிருஷ்ணனின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

0

ரம்யா கிருஷ்ணன்

இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகைகளில் ஒருவர் ரம்யா கிருஷ்ணன். இவர் தமிழில் 1983ஆம் ஆண்டு வெளிவந்த வெள்ளை மனசு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மற்றும் இந்தி என தொடர்ந்து பல்வேறு மொழிகளில் நடித்து வந்தார். பின் ரஜினியின் படையப்பா படத்தின் மூலம் வில்லியாக பட்டையை கிளப்பினார். ரம்யா கிருஷ்ணன் என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும் கதாபாத்திரங்களில் நீலாம்பரியும் ஒன்று.

ரோஹினியால் மனோஜிடம் நேருக்கு நேர் சிக்கிய ஜீவா- சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பான கதைக்களம்

இதன்பின் தெலுங்கில் வெளிவந்த பாகுபலி திரைப்படம் இவருக்கு மாபெரும் அந்தஸ்தை ஏற்படுத்தி கொடுத்தது. மேலும் கடந்த ஆண்டு மீண்டும் ரஜினிகாந்துடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார்.

சொத்து மதிப்பு

கடந்த 2003ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் கிருஷ்ணா வம்சி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு ரித்விக் எனும் ஒரு மகனும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 53 வயதிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒரு படத்தில் நடிக்க ரூ. 3 முதல் ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். மேலும் இவருடைய சொத்து மதிப்பு ரூ. 98 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. 

பொறுப்பு துறப்பு : இந்த தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

NO COMMENTS

Exit mobile version