Home இலங்கை அரசியல் இலங்கையின் உறவு தொடர்பில் நம்பிக்கை வெளியிட்டுள்ள ஜூலி சங்

இலங்கையின் உறவு தொடர்பில் நம்பிக்கை வெளியிட்டுள்ள ஜூலி சங்

0

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உணவுப் பாதுகாப்பு ரீதியான உறவு கிட்டத்தட்ட தசாப்த காலத்தை கொண்டது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளருடன் இன்று (26.04.202) இடம்பெற்ற விசேட சந்திப்பு குறித்து தனது எக்ஸ (X) தளத்தில் பதிவேற்றியுள்ளார். 

குறித்த பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலெக்சிஸ் டெய்லருடனான (Alexis Taylor) சந்திப்பில் இலங்கையின் உறவு குறித்து உரையாடினோம். 

சீனாவின் சிவப்புக் கோடுகளை மிதிக்க வேண்டாம்: அமெரிக்காவுக்கு நேரடி எச்சரிக்கை

நிதி உதவிகள் 

அமெரிக்க நன்கொடைகள் மூலம் பாடசாலை குழந்தைகளுக்கு சத்தான உணவை வழங்குவதற்கான வேலைத்திட்டம் குறித்தும் கலந்துரையாடினோம். 

மேலும், அமெரிக்க உதவியுடன் முன்னெடுக்கப்படும் பால் உற்பத்தியை நவீனமயப்படுத்துவது குறித்து பேசப்பட்டது.

அதேநேரம், அந்த திட்டத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் பால் உற்பத்திச் செயற்பாடுகளை விரிவுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், இத்துறையில் இளைஞர்களை அதிகளவில் உள்ளீர்ப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்” என குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலுக்காக தம்மை தயார்படுத்தும் வெளிநாடுகள்

கிழக்கை மீட்போம் என கூறுபவர்கள் வாயளவில் மட்டும் பேசி அரசியலை மேற்கொள்கின்றனர்: சிறிநேசன் ஆதங்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version