கடந்த காலங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என, ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தோழர் தோழர் என்று என்னை ரணில் கூறிக்கொண்டாலும், மோசடிகள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுப்பேன் என கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது தெரிவித்துள்ளார்.
நான் தமிழ் மக்களை அச்சுறுத்துவேன் என்றும் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டுமென்றும் வடக்கு மக்களிடம் கூறி, மிகவும் தாழ்மையான மனப்பான்மையுடன் இனவாதத்தைத் தூண்ட ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ரணிலை சாடும் அனுர
தேசிய மக்கள் சக்திக்கு எதிராக விமர்சனம் செய்ய முடியாத நிலைமையை சந்தித்திருக்கிறார்கள். போலியான, திரிபுப்படுத்தப்பட்ட கருத்துகளிலேயே அவர்களின் முழு தேர்தல் செயற்பாடுகளும் தங்கியுள்ளன.
வடக்குக்கு சென்று தமிழ் மக்களை சந்தித்து இனவாதத்தை தூண்டுவதற்காக ரணில் வெளியிட்ட கருத்து, அவரின் முயற்சியை வடக்கு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நிராகரித்துள்ளார்.
தற்போது ரணிலே மன்னிப்பு கோரவேண்டும். நாட்டுக்குள் இனவாதத்தை தூண்டும் அரசியல் தற்போது ஒழிந்துவிட்டது. ஒருவருக்கு ஒருவரும் விரிசலை ஏற்படுத்தும் அரசியலும் ஒழிந்துவிட்டது.
சுமந்திரனுக்கு எதிராக தமிழ் மக்கள்
அதனால், ரணில் பழைய பொருட்கள் உள்ள கடையில் இருக்க வேண்டியவர்கள். அவை அசாத்தியமானவை. அவை காலாவதியாகிவிட்டன என குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளரான அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் உரையாற்றுகையில், தென்னிலங்கை மக்கள் மாற்றம் ஒன்றினை ஏற்படுத்த தயாராகி வருகின்றனர். அதற்கு தமிழர்கள் ஒத்துழைக்குவில்லை என்றால் அவர் வேறு விதமாக எடுத்துக் கொள்வார்கள் என குறிப்பிட்டிருந்தார்.
தமிழ் மக்களை அச்சுறுத்தும் வகையில் அனுரகுமார திசாநாயக்க வெளியிட்ட கருத்துக்கு, சுமந்திரன் ஆதரவு தெரிவித்துள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.