Home இலங்கை அரசியல் ரணிலுக்கும் அநுரவிற்குமான ஒப்பந்தம்: சஜித் பகிரங்கம்

ரணிலுக்கும் அநுரவிற்குமான ஒப்பந்தம்: சஜித் பகிரங்கம்

0

ரணில் விக்ரமசிங்கவும் (Ranil Wickremesinghe), அநுர குமார திஸாநாயக்கவும் (Anura Kumara Dissanayake) தன்னை தோற்கடிக்கும் சதியில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

கேகாலையில் (Kegalla) இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “அநுர இங்கு வந்து கூட்டம் நடத்தினார் என்று கேள்விப்பட்டேன். ஆனால் அவர் தனியாக வந்தார்.ரணில் விக்ரமசிங்க வரவில்லை.

காரணம் 

இப்போது இருவருக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று உள்ளது, எப்படியாவது சஜித் பிரேமதாசவை தோற்கடிக்க வேண்டும். ஏன்? அவர்களுக்கு அச்சம்” என்றார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத் தொடரின் மற்றுமொரு பொதுக்கூட்டம் நேற்று பிற்பகல் ஹெட்டிபொலவில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.    

 

Source: https://ibctamil.com/article/ranil-and-anura-plot-to-defeat-sajith-in-election-1726594213

NO COMMENTS

Exit mobile version