2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நகர்வுகள் புலனாய்வுத்துறைக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக இராணுவ ஆய்வாளர் கலாநிதி. அருஸ் (Arus) தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் (LankaSri) ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வடக்கில் உள்ள அத்தனை கடல் வளத்தையும் இந்தியாவிற்கு தாரை வார்த்து கொடுத்தது மட்டுமல்லாமல் புலம்பெயர்ந்த அமைப்புக்களினதும் முதலிட்டையும் செல்ல விடாது தடுப்பது ஒன்று இலங்கை மற்றொன்று இந்தியா என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வடக்கை, கிழக்கை அபிவிருத்தியடைய செய்வோம் என பொய்யைதான் கூறுகிறார்கள்.
சிங்கள மக்கள் தேர்தல் குறித்து எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி நம்பிக்கையிழந்து செயற்படுகின்ற போக்கும் தற்போது அதிகரித்துள்ளது.
இவ்வாறான பின்னணியில் தன்னை நோக்கி ஆபத்து நெருங்கி வருவதனை அறிந்து இந்தியா தனக்கு ஆதரவான ஒருவரை ஜனாதிபதியாக கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
மறுபுறம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க பிரஜைகளுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அவசர பயண எச்சரிக்கையை விடுத்துள்ளதுடன், தமக்கு ஆதரவான வேட்பாளரை வெற்றி பெற வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இது உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகிறது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
https://www.youtube.com/embed/yZfTlI91m10