Home இலங்கை அரசியல் ரணில் ஏன் பிள்ளையானிடம் பேச முற்பட்டார்! உண்மை வெளிப்படும் என்ற அச்சமா….

ரணில் ஏன் பிள்ளையானிடம் பேச முற்பட்டார்! உண்மை வெளிப்படும் என்ற அச்சமா….

0

இலங்கையை உலுக்கிய முக்கிய சம்பவங்களில் ஒன்றாக பல உயிர்களை பறித்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் காணப்படுகின்றது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த இந்த பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரி யார் என்பது பற்றி அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் ஆராய்வதாக கூறியிருந்ததன.

அதேபோன்று தற்போதைய ஜனாதிபதி அநுரகுமாரவும் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் குறித்து தகவல் வெளியிடுவதாக கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் குற்ற புலனாய்வு பிரிவினரின் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏன் பிள்ளையானை தொடர்புகொள்ள முயன்றார்? உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னால் உள்ளவர்கள் யார்? இந்த சம்பவம் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்து இந்த காணொளியில் முழுமையாக காணலாம்…,

NO COMMENTS

Exit mobile version