Home இலங்கை அரசியல் சர்வதேச ஊடகத்தின் மீது கடும் கோபத்தில் ரணில்

சர்வதேச ஊடகத்தின் மீது கடும் கோபத்தில் ரணில்

0

அல்ஜசீரா சர்வதேச ஊடகத்திற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய நீண்ட நேர்காணல் தொடர்பில் சர்வதேச ரீதியில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கலந்துரையாடலில் பெரும்பகுதி மறைக்கப்பட்டு வெளியிடப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் ரணில் விக்ரமசிங்க பிரித்தானியா சென்றிருந்த போது பதிவு செய்யப்பட்ட நேர்காணல் நேற்று அல்ஜசீரா தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது.


பல ரகசியங்கள்

நிகழ்ச்சி தொகுப்பாளர் எழுப்பிய கேள்விகளுக்கு முன்னாள் ஜனாதிபதி பதிலளித்த போது சூடான நிலை ஏற்பட்டது.

இதில் இலங்கையில் மறைக்கப்பட்ட பல ரகசிங்கள் குறித்து ஆதாரங்களுடன் கேள்வி எழுப்பப்பட்டன.

இது குறித்து ரணில் விக்ரமசிங்க நேற்று ஊடகங்களுக்கு தனது கருத்துக்களை தெரிவித்தார்.

அதில் தான் பேசியவற்றை முழுமையாக வெளியிடவில்லை. அவ்வாறு வெளியிட்டிருந்தால் இதனை விடவும் சிறந்த பதில்கள் வழங்கியதனை பார்த்திருக்க முடியும்.

இலங்கையில் நேரலை என்றால் அதனை முழுமையாக ஒளிபரப்பியிருப்பார்கள்.

எனினும் இது எடிட் செய்து வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு ஒன்றும் செய்ய முடியாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version