Home முக்கியச் செய்திகள் ஜனாதிபதி வேட்பாளர்கள் நேரடி விவாதம் : நழுவும் ரணில் , அனுர

ஜனாதிபதி வேட்பாளர்கள் நேரடி விவாதம் : நழுவும் ரணில் , அனுர

0

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நேரடி விவாதம் எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மார்ச் 12 இயக்கம் இந்த தொடர் விவாதங்களை நடத்துகிறது.

முதல் நாள் விவாதத்தில் நான்கு வேட்பாளர்கள் பங்கேற்பார்கள். ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச(sajith premadasa), சிறிலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் நாமல் ராஜபக்ச(namal rajapaksa), சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் திலித் ஜயவீர(Dilith Jayaweera), சுயேச்சை வேட்பாளர் பி. .அரியநேத்திரன்(Arianethiran) ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

விவாதத்தில் கலந்துகொள்ள முடியாது

இந்த விவாதத்தில் கலந்துகொள்ள முடியாது என சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) அந்த அமைப்புக்கு அறிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின்(anura kumara dissanayaka) பங்கேற்பு உறுதிப்படுத்தப்பட உள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த விவாதம் நடைபெறவுள்ளது.

இந்த விவாதத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட விவாதத்தில் 12 வேட்பாளர்கள் பங்கேற்பார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 12 இயக்கம் 

விவாதங்கள் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

மார்ச் 12 இயக்கம் விவாதத்தின் போது வேட்பாளர்களுக்கு கேள்விகளை சமர்ப்பிக்க வாக்காளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்றும் கேட்கப்படும் கேள்விகளை ஒரு குழு தீர்மானிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version