Home இலங்கை அரசியல் மர்ம சக்தியால் வெளியான தகவல்.. ரணில் கைதில் புதிய சர்ச்சை

மர்ம சக்தியால் வெளியான தகவல்.. ரணில் கைதில் புதிய சர்ச்சை

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்படுவார் என்பதை பிரபஞ்சத்தில் (Space) இருந்து ஒரு சக்தி தனக்கு வெளிப்படுத்தியதாக யூடியூபர் சுதத்த திலகசிறி கூறியதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, குற்றபுலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்படுவதற்கு முன்னரே அவர் கைது செய்யப்படுவார் என குறித்த யூடியூபர் வெளிப்படுத்தியிருந்தார். 

இந்நிலையில், ரணில் விக்ரமசிங்க தற்போதைய அரசாங்கத்தால் திட்டமிட்டு கைது செய்யப்பட்டதாகவும் அதனாலேயே முன்கூட்டியே தகவல் வெளியாகியுள்ளது எனவும் பல எதிர்ப்புக்களும் விமர்சனங்களும் எழுந்தன.

திட்டமிட்ட சதி.. 

அத்துடன், குறித்த யூடியூபர் சுதத்த திலகசிறி மீது குற்றபுலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டது. 

இதற்கிடையில், தென்னிலங்கை ஊடகம் ஒன்று, பிரபஞ்சத்திலிருந்து தனக்குக் கிடைத்த செய்தியின் அடிப்படையில் தான் இந்த தகவலை வெளியிட்டதாக யூடியூபர் சுதத்த திலகசிறி கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், சுதத்த திலகசிறி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது, சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதை உறுதிப்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

மேலும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தரப்பிலிருந்து இது தொடர்பாக தனக்கு எதுவித தகவலும் வழங்கப்படவில்லை என்று சுதத்த திலகசிறி காணொளி ஒன்றில் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version