முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு, அவருக்கு பிணை வழங்கப்படாமையானது தவறானது என்று தோன்றுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“அரச தலைவர்கள் தங்கள் பதவிக் காலத்தில் செய்த கடுமையான குற்றங்களுக்காக
வழக்குத் தொடரப்பட வேண்டும்.
பிணை மறுப்பு
இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு, அவருக்கு பிணை வழங்கப்படாமையானது தவறானது. யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல.
எனினும், நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றத்திற்காக,
பிணை மறுக்க எடுத்துக்கொண்ட நேரம் மற்றும் வலியுறுத்தல் என்பன கேள்விகளை
எழுப்பியுள்ளது” என தெரிவித்துள்ளார்.
