Home இலங்கை அரசியல் கட்சி சாராத பொது வேட்பாளராக ரணில்: ரவி கருணாநாயக்க நம்பிக்கை

கட்சி சாராத பொது வேட்பாளராக ரணில்: ரவி கருணாநாயக்க நம்பிக்கை

0

சிறுபான்மையினக் கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு கட்சி சாராத பொது வேட்பாளராகவே ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் கலமிறங்குவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அத்தோடு, சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி மட்டுமின்றி அனைத்து கட்சிகளுடனும் தமக்கு தொடர்புகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “தேர்தலுக்கு நேர்மையாக முகங்கொடுக்க அஞ்சி, மக்களை ஏமாற்றி வாக்கு வேட்டை நடத்துவதற்காக சிலர் பல்வேறு உறுதிமொழிகளை வழங்கி வருகின்றனர்.

தென்கொரியாவில் குடியேறப்போவதாக வெளிவந்த தகவல்: முற்றிலும் நிராகரித்த மைத்திரி

கட்சிகளுடனான தொடர்பு

செய்ய முடியாத விடயங்களைக் கூட உறுதிமொழியாக வழங்கி வருகின்றனர். இதனால் அரசியல் கட்சிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போயுள்ளது.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சி செய்யக்கூடிய விடயங்களையே கூறி வருகின்றது, கசப்பாக இருந்தாலும் உண்மையைக் கூறுவது மேலானதாகும்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் மட்டும் அல்ல அனைத்து கட்சிகளுடனும் எமக்குத் தொடர்பு உள்ளது.

எதிர்வரும் அதிபர் தேர்தலில் அனைவரையும் இணைத்துக்கொண்டு கட்சி சாராத வேட்பாளராகவே அதிபர் ரணில் விக்கிரமசிங்க களமிறங்குவார்.” என கூறியுள்ளார்.

ரணில் இல்லையேல் மீண்டும் வரிசை யுகம்: வஜிர அபேவர்தன எச்சரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version