Home இலங்கை அரசியல் கெஹெலிய வழக்கில் முக்கிய திருப்பம்! சாட்சியாக ரணில்

கெஹெலிய வழக்கில் முக்கிய திருப்பம்! சாட்சியாக ரணில்

0

தரமற்ற என்டிபொடி தடுப்பூசிகளை வாங்கியது தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சாட்சியாக பெயரிடப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் கிட்டத்தட்ட 350 பேர் சாட்சிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதில் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் குழு சாட்சிகளாகப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் குழு

அவர்களில் முன்னாள் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, விஜயதாச ராஜபக்ச, டக்ளஸ் தேவானந்தா மற்றும் ரொஷான் ரணசிங்க ஆகியோர் அடங்குவர்.

 

மேலும், தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஆனந்த விஜேவிக்ரம உள்ளிட்ட மருத்துவர்கள் குழுவும் இதில் அடங்கும். 

NO COMMENTS

Exit mobile version