Home இலங்கை அரசியல் ரணிலுடன் மந்திராலோசனை நடத்திய பசில் : பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான தகவல்

ரணிலுடன் மந்திராலோசனை நடத்திய பசில் : பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான தகவல்

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான மற்றுமொரு சுற்று பேச்சுவார்த்தை நேற்று பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

இதில் பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஹரின் பெர்னாண்டோ, பிரசன்ன ரணதுங்க, திரன் அலஸ், காஞ்சன விஜேசேகர ஆகியோரும் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளதோடு, மே தினத்திற்கு பின்னர் ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களை விரைவில் ஆரம்பிக்க வேண்டும் எனவும் அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.

நாமலுக்குக் கிடைத்த பதவியால் பசில் – சமல் கடும் அதிருப்தி


ஜனாதிபதி தேர்தல்

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், அதற்கு ஆதரவைப் பெற்றுக் கொள்ள அனைத்துத் தரப்பினரிடமும் எழுத்துபூர்வமாக கோரிக்கை விடுப்பதே சிறந்தது என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்சவின் கட்சி, உதய கம்மன்பிலவின் கட்சி, டலஸ் அழகப்பெரும குழுவினர் உள்ளிட்ட கட்சிகளை மீளக் கொண்டு வருவதற்கும் ஆதரவை பெறுவதற்கு பிரதமரின் தலையீடு அவசியம் எனவும் பசில் ராஜபக்ஷ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்: வேட்பாளர்களின் எண்ணிக்கையில் முதல்முறை ஏற்பட்ட மாற்றம்

எவ்வாறாயினும், இறுதியில், அரசாங்கத்தின் பெரும்பாலான பணிகளை மேற்கொள்ள விரும்புவதால், ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவை ஜூன் மாத இறுதியில் அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐந்தாவது தடவையாகவும் எந்தவித இணக்கப்பாடும் இல்லாமல் கலந்துரையாடல் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version