Home இலங்கை அரசியல் யாழ் நூலகம் எரிக்கப்பட்டதன் பின்னணியில் பட்டலந்த சூத்திரதாரிகள் : அமைச்சர் வெளியிட்ட தகவல்

யாழ் நூலகம் எரிக்கப்பட்டதன் பின்னணியில் பட்டலந்த சூத்திரதாரிகள் : அமைச்சர் வெளியிட்ட தகவல்

0

பட்டலந்தை வதை முகாம் மட்டுமல்ல நாட்டிலுள்ள பல வதைமுகாம்களுக்கு பின்னணியிலும்  1981ஆம் ஆண்டு யாழ்.நூலகம் எரிக்கப்பட்ட போது அதற்கு பின்னால் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி இருக்கவில்லையா என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கேள்வி எழுப்பியுள்ளார்

பட்டலந்தை வதை முகாம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பட்டலந்தை வதை முகாமினுடைய பிரதான சூத்திரதாரி

ஜூலை இனக்கலவரம் மற்றும் நாட்டில் இடம்பெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடனும் அந்தக் காலப்பகுதியில் இருந்த ரணில் விக்ரமசிங்க, ஜே. ஆர் ஜெயவர்தன, பிரேமதாச போன்றோர் இருக்கவில்லையா என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வதைமுகாம்களாக இவ்வாறு நிரம்பிக் காணப்படும் எமது பிரதேசத்திற்கு எப்போது நீதி கிடைக்கும் என மக்கள் ஏங்கிக் கொண்டுள்ளனர்.

விசேடமாக 1977ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து 1994ஆம் ஆண்டு வரை நாட்டை கொலைக்களமாக மாற்றியவர்கள் ஐக்கிய தேசிய கட்சியினரே எனவும் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க ஐக்கிய தேசிய கட்சியினுடைய கொலைக்களமாக இருக்கின்ற பட்டலந்தை வதை முகாமினுடைய பிரதான சூத்திரதாரி தான் ரணில் விக்ரமசிங்க என்றும் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version