Home இலங்கை அரசியல் அமெரிக்காவை குற்றம் சுமத்தும் ரணில்

அமெரிக்காவை குற்றம் சுமத்தும் ரணில்

0

அமெரிக்காவிடமிருந்து வர்த்தக நிவாரணத்தைப் பெறுவதற்கு, கடன் மறுசீரமைப்பு
பேச்சுவார்த்தைகளை ஒரு உந்து சக்தியாகப் பயன்படுத்த வேண்டும் என முன்னாள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் மறுசீரமைபுக்கு உதவிய நாடு என்ற வகையில்,
இலங்கைக்கு அமெரிக்கா பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவே, கடனை திருப்பி செலுத்த

கொழும்பில் நிகழ்வொன்றில் இதனை தெரிவித்த அவர், இலங்கை தனது சர்வதேச இறையாண்மை
பத்திரங்களை திருப்பிச் செலுத்த வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது,

ஆனால் பொருளாதாரம் தொடர்ந்து நிலையற்றிருந்தால் அது சாத்தியப்படாது என
எச்சரித்துள்ளார்.

இதன்போது இலங்கை சார்பில் ஐ எம் எப் க்கும் பத்திரகாரர்களுக்கும் அமெரிக்காவே,
கடனை திருப்பி செலுத்த வேண்டியிருக்கும் என்றும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு ஆலோசனை

இலங்கையின் மந்தமான மீட்சியை வியட்நாம் மற்றும் பங்களாதேஷுடன் ஒப்பிட்டு,
இலங்கை சிக்கித் தவிக்கும் போது அந்த நாடுகள் முன்னேறி வருவதாக ரணில்
கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவீர்களா என்று ரணில்
விக்ரமசிங்கவிடம் கேட்டபோது, ”அதில் எந்த அர்த்தமும் இல்லை – அவர்கள் அதை
ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்” என்று பதிலளித்தார்.

இதன்போது, வர்த்தகம் மற்றும் உள்கட்டமைப்பு முயற்சிகள் தொடர்பான சீனா, ஜப்பான்
மற்றும் இந்தியாவுடன் வலுவான உறவுகளை வலியுறுத்தியதுடன் ஆழமான பிராந்திய
ஈடுபாட்டின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போர், இலங்கையின் பொருளாதார
எதிர்காலத்திற்கு பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் முன்னாள் ஜனாதிபதி
ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version