ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் விசேட கூட்டம் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்,
“நாட்டின் பொருளாதார முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டது. இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த காலாண்டின் பின்னர் இலங்கையுடன் இணைந்து செயற்படக்கூடிய பொருளாதாரம் இருப்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளும். அடுத்து, நாங்கள் தேர்தலுக்கு தயாராக இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவிக்கையில்,“உள்ளூராட்சி சபைகளில் பணியாற்றும் 8400 ஊழியர்கள் விரைவில் நிரந்தர நியமனம் பெற்றுத் தருமாறு வலியுறுத்தப்பட்டது.
அந்த ஊழியர்களுக்கு மிக விரைவில் நிரந்தர நியமனம் வழங்கி தேவையான பணிகளை செய்து தருவோம் என நம்புகிறோம்.
தேர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் இந்த ஆண்டு கண்டிப்பாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். பொதுஜன பெரமுன மற்றும் நாம் அனைவரும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவோம் என நம்புகிறோம்.
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் யார் என்பது அடுத்த மாதம் அறிவிக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பரந்துபட்ட அரசியல் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ரணில்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |