Home இலங்கை சமூகம் அமைச்சரவை கூட்டத்திற்கு அவசர அழைப்பு விடுத்துள்ள ரணில்

அமைச்சரவை கூட்டத்திற்கு அவசர அழைப்பு விடுத்துள்ள ரணில்

0

அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe ) இன்று (26) பிற்பகல் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ (Harin Fernando ) , இன்று நாட்டுக்கு அதிபர் விடுக்கவுள்ள விசேட அறிக்கை தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவித்ததாக தெரிவித்துள்ளார்.

  

விசேட உரை

இந்த நிலையில், அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று இரவு 8.00 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் இந்த விசேட உரையின் போது, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பிலும் மக்களுக்கு தெரிய படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

மக்களுக்கு நிவாரணம்

இதேவேளை, இலங்கை மக்களுக்கு பல நிவாரணங்கள் கிடைக்கும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆற்றவுள்ள விசேட உரை தொடர்பான அறிவிப்பு, இலங்கையின் அரசியல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version