Home இலங்கை அரசியல் ஜனாதிபதி நிதியம் தொடர்பில் ரணில் வெளியிட்டுள்ள அறிக்கை

ஜனாதிபதி நிதியம் தொடர்பில் ரணில் வெளியிட்டுள்ள அறிக்கை

0

ஜனாதிபதி நிதியிலிருந்து பணம் பெற்ற அரசியல்வாதிகள் பற்றிய விடயங்கள் பேசுபொருளாகிய நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க((Ranil Wickremesinghe) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில், தனது ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் வழங்கப்பட்ட விதம் குறித்து விளக்கமளித்தே ரணில் விக்ரமசிங்கவால் இது வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி நிதியம்

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள், அனைத்து விண்ணப்பங்களுக்கும் பணம் செலுத்தப்பட்டது.

அதற்காக 1515 மில்லியன் ரூபாவும், 2023 இல் 839 மில்லியன் ரூபாவும், 2024 செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியில் நோயாளர்களுக்கான மருத்துவ உதவியாக சுமார் 450 மில்லியன் ரூபாவும் செலுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி நிதியம் தொடர்பில் ரணில் வெளியிட்டுள்ள அறிக்கை | Ranil Clarifies Presidential Fund Use

மேலும், பொதுமக்கள் பிரதிநிதிகள் தனிப்பட்ட ரீதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த போதிலும், ஒரு கோரிக்கையை தவிர ஏனைய அனைத்து கோரிக்கைகளுக்கும் ஜனாதிபதி நிதியத்தின் பொது நடைமுறைகளை பின்பற்றி 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான நிதியுதவி வழங்கப்படவில்லை.

ரணில் விக்ரமசிங்க

2022 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி வரை ஜனாதிபதி நிதியத்தில் வைக்கப்பட்டிருந்த 7,000 மில்லியன் ரூபாவை பணத்திற்காக, பல்வேறு கொடுப்பனவுகள் இருந்தபோதிலும், 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை 11,000 மில்லியன் ரூபாவைத் தாண்டிய மீதியை பேணுவதற்கு தாம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது‘‘ என்றுள்ளது.

ஜனாதிபதி நிதியம் தொடர்பில் ரணில் வெளியிட்டுள்ள அறிக்கை | Ranil Clarifies Presidential Fund Use

இதேவேளை, கடந்த 11 மாதங்களில் தனது பாதுகாப்புச் செலவுகளுக்காக 82 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என  ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version