Home இலங்கை அரசியல் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் பிரபல வர்த்தகர்

சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் பிரபல வர்த்தகர்

0

இலங்கையின் (Sri lanka) முன்னணி ஆடை வர்த்தக நிறுவனத்தின் தலைவர் ரணில் விலத்தரகே, சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளார்.

பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்திலேயே அவர் குறித்த சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரணில் வில்லத்தரகே ஆடை வர்த்தக நிறுவனத்தின் தலைவராவார்.

சிலிண்டர் சின்னம்

சிலிண்டர் சின்னத்தில் கொழும்பு மாவட்ட தலைவராக முன்னாள் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவின் தலைமைத்துவத்தின் கீழ் அவர் போட்டியிடவுள்ளார்.

ரணில் வில்லத்தரகே ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) பொருளாதார வேலைத்திட்டத்திற்கு ஆதரவளித்து ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.

மேலும் இவர் கெஸ்பேவ வலய அமைப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்க கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version