Home இலங்கை அரசியல் தொழிலற்ற இளைஞர்களுக்கு ரணில் வெளியிட்டுள்ள நற்செய்தி!

தொழிலற்ற இளைஞர்களுக்கு ரணில் வெளியிட்டுள்ள நற்செய்தி!

0

கடந்த நான்கு வருடங்களாக தொழிலின்றி இருக்கும் இளைஞர்களுக்கு,  அரச, தனியார் துறைகளில் பயிற்சியுடன் வேலை வழங்குவோம் என ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

தொம்பே பிரதேசத்தில் நேற்று (01) நடைபெற்ற “இயலும் சிறிலங்கா” வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “இளையோரை நவீன விவசாயத்துக்குள் உள்வாங்குவோம், ஏற்றுமதியை ஊக்குவிப்போம், சுற்றுலாவை ஊக்குவிப்போம்.

ஐக்கிய தேசிய கட்சி

புதிய முதலீடுகளை கொண்டுவர தனியொரு செயற்றிட்டம் உள்ளது. கேரகலவில் முதலீட்டு வலயத்தின் 3ஆவது வலயம் அமைக்கப்படும். அதனால் பெருமளவானவர்களுக்கு தொழில் வாய்ப்பு கிடைக்கும்.” என்றார்.

மேலும், “சஜித்துக்கு (Sajith Premadasa) வழங்கும் வாக்குகள் அனுரவுக்கு (Anura Kumara Dissanayake) வழங்கும் வாக்குகளுக்கு சமமானவை என்பதை ஐக்கிய தேசிய கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டும். அதனால் செப்டம்பர் 21 சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களியுங்கள்.

இல்லாவிட்டால், சிலிண்டரும் இருக்காது முதலீட்டு வலயமும் கிடைக்காது.” என ரணில் விக்ரமசிங்க கூட்டத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version