முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பிரித்தானிய விஜயம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுத்துள்ளார்.
பிரித்தானியாவில் உள்ள வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்தது தொடர்பான ஊடக அறிக்கைகளை மறுத்து அவரது அலுவலகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதன்படி, தொடர்புடைய அனைத்து குற்றச்சாட்டுகள் குறித்தும் ரணில் விக்ரமசிங்க விரைவில் ஒரு முறையான அறிக்கை வெளியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
சிஐடி விசாரணை
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது அவரது வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணை நடத்துவது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்ததை தொடந்து ரணிலின் இந்த கருத்து வெளிவந்துள்ளது.
இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணத்திற்கு நிதியளிக்க அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
