Home இலங்கை அரசியல் இந்தியாவை போன்ற வலுசக்தி அபிவிருத்தி திட்டங்களை வகுத்துள்ள ரணில்

இந்தியாவை போன்ற வலுசக்தி அபிவிருத்தி திட்டங்களை வகுத்துள்ள ரணில்

0

சிலிண்டருக்கு வாக்களித்தால் எதிர்காலத்தில் இந்தியாவின் தமிழ்நாடு போன்ற வலுசக்திக்கான அபிவிருத்தியை இலங்கையிலும் மேற்கொள்ளலாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குருநாகலில் நேற்று (10.09.2024) பிற்பகல் நடைபெற்ற குருநாகல் மாவட்ட அறிஞர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினருடான கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இயற்கை வலுசக்தி

“இயற்கை வலுசக்தியை பயன்படுத்தும்போது அணுசக்தியும் தேவைப்படலாம்.

இது பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அணு உலை அமைந்துள்ளது.

அவ்வாறான நிலைக்கு நாமும் செல்ல வேண்டியிருக்கும்.

மேலும், இலங்கையில் மிகப் பெரிய கிராபைட் சுரங்கம் கஹடகஹா பகுதியிலுள்ள சுரங்கமாகும்.

தற்போது கிராபைட் கையிருப்பு தொடர்பிலான பிரச்சினை எழுந்துள்ளது. நவீன அறிவியல் ஆய்வு அறிக்கை பெறப்பட உள்ளது.

கிராபைட் சுரங்கம்

ராகேதர பகுதியிலும் கிராபைட் சுரங்கம் ஒன்று உள்ளது. கஹடகஹா சுரங்க கிராபைட் உலகின் சிறந்த கிராபைட் வகைகளில் ஒன்றாகும்.

மேலும், நாடு முழுவதும் உள்ள கனிம வளங்களைக் கண்டறியும் திட்டத்தைத் ஆரம்பிக்கவுள்ளோம். மேலும் குருநாகல், தம்பதெனிய, யாப்பஹுவ, படுவஸ்நுவர ஆகிய பிரதேசங்களை சுற்றுலாப் பிரதேசமாக அபிவிருத்தி செய்வது குறித்தும் கவனம் செலுத்துகிறோம்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகாமையில் உள்ளதால், இந்தப் பகுதியில் புதிய ஹோட்டல்களை அமைக்கும் திட்டமும் உள்ளது.

குறிப்பாக யாப்பஹுவ உலகப் புகழ் பெற்றதையடுத்து அதன் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு நவீன விவசாயத்திற்கு மாறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

மேலும், வன்னி ஹத்பத்து பிரதேசத்தில் சூரிய சக்திக்கான திறன் காணப்படுகிறது.

ஆனால் குருநாகல் மாவட்டத்தை டிஜிட்டல் பொருளாதாரத்துடன் அபிவிருத்தி செய்வதே எமது நோக்கமாகவுள்ளது.

அத்தோடு குருநாகல் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டதன் பின்னர் பாரிய டிஜிட்டல் பொருளாதார வலயமொன்று உருவாக்கப்படும்” என்றார்.

NO COMMENTS

Exit mobile version