Home இலங்கை அரசியல் ரணிலின் நாடாளுமன்ற உரையில் நம்பிக்கை இல்லை : தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சாடல்

ரணிலின் நாடாளுமன்ற உரையில் நம்பிக்கை இல்லை : தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சாடல்

0

அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) நாடாளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரை எந்த வகையிலும் நம்பிக்கை தரவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் (S. Kajendran) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்கும் செயற்பாடுகளை ரணில் முன்னெடுத்து வருகிறார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழில் நேற்று (04.07.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே செல்வராசா கஜேந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார வளர்ச்சி

இது தொடர்பில் கஜேந்திரன் மேலும் தெரிவிக்கையில், அதிபர் ரணில் சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து நிதியுதவியை பெற்றுக்கொள்வதற்காக சலுகைகளுக்கு விலை போகக்கூடியவர்களை வைத்துக் கொண்டு பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்த உண்மைக்கு புறம்பான பிரசாரங்களை இந்திய மேற்குத்தரப்புக்கள் தெரிவித்து வருகிறார்.

இனப்பிரச்சினை

நாட்டை பொருளாதார வளர்ச்சியில் முன்னோக்கி கொண்டு செல்வதாக என்ற கதைகளை சொல்லி மக்களை ஏமாற்றி மீண்டும் ஒரு அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறார்.

இந்த நாட்டில் 75 வருடமாக காணப்படும் இனப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எதனையும் அவர் முன்னெடுத்திருக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version