ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickramasinghe) சிலிண்டர் சின்னம் குறித்த ஆட்சேபனைகளை நிராகரிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
ஜன அரகலயே புரவெசியோ என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் சானக்க பண்டார என்பவரினால் தேர்தல்கள் ஆணைக்குழுவில் (Election Commission) இது குறித்த முறைப்பாட்டை முன்வைத்திருந்தனர்.
குறித்த கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (saman sri ratnayake) பதிலளித்துள்ளார்.
ஒதுக்கப்பட்ட சின்னங்கள்
உள்ளூராட்சி தேர்தலின் போது காஸ் சிலிண்டரில் பலர் கேட்டுள்ளனர். ஒதுக்கப்பட்ட சின்னங்கள் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே.
மற்றவை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். எனவே, பொய்யான விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டாம். இவற்றுக்குப் பதில் சொல்வதும் பொய்யானது, ஊடகங்களில் விளம்பரம் பெறுவதற்காக இப்படிச் செய்கிறார்கள்.
இந்த விடயங்களை ஊடகங்களும் தேர்தல் செய்திகளின் போது அறிந்து கொள்ள வேண்டும் என ஊடகங்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன.
இல்லாவிட்டால், இங்கு பலர் வந்து மைக்கை பிடித்து, பேசத் தொடங்கினால் எல்லோரும் மேதைகள் என ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க விளக்கமளித்துள்ளார்.