Courtesy: Sivaa Mayuri
ஜனாதிபதி தேர்தலைக்காட்டிலும், பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு உத்வேகம் குறைவாகவே உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று காலை வாக்களிக்க சென்று பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நிச்சயமற்ற தன்மை
இதன்போது அவர், “இந்நிலைமை நிச்சயமற்ற தன்மையை உருவாக்கக் கூடும்.
குறைந்த வாக்குப்பதிவுகள் என்பது, எல்லா கட்சிகளையும் பாதிக்கும் என்பதால் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும். ஏற்கனவே நாட்டில் எல் போர்ட் நிர்வாகி இருக்கிறார்.
நாடாளுமன்றமும் அதேபோன்று இருக்கக்கூடாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.