Home இலங்கை அரசியல் சிறுபான்மை மக்கள் மத்தியில் போலி விம்பத்தினை உருவாக்க ரணில் திட்டம்:அருன் ஹேமச்சந்திரா

சிறுபான்மை மக்கள் மத்தியில் போலி விம்பத்தினை உருவாக்க ரணில் திட்டம்:அருன் ஹேமச்சந்திரா

0

அண்மைக் காலமாக அதிபர் ரணில் விக்ரமசிங்க(ranil wickremasinghe) சிறுபான்மை மக்கள்
மத்தியில் ஒரு போலி விம்பத்தினை உருவாக்க எத்தனிப்பதாக தேசிய மக்கள் சக்தியின்
மத்திய குழு உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட செயற்பாட்டாளருமாகிய அருன்
ஹேமசந்திரா தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு
தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் : கோட்டாபயவிற்கு கர்தினால் பதில்

பதவியை இழந்தவர் ஆளுநராக தெரிவு

கட்சி தாவல்களின் காரணமாக நீதிமன்ற தீர்ப்பினால் விரட்டியடிக்கப்பட்ட
சுற்றுச்சூழல் அமைச்சர் என்ற பதவியை இழந்த ஒருவரை ஆளுநராக அதிபர் நியமித்துள்ளார்.இதனை ஒரு போதும் ஏற்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நசீர் அஹ்மட்(naseerahmed)சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்தபோது திருகோணமலை மாவட்டத்தில்
ஷாபி நகர் எனும் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு காரணமாக பாரிய சுற்றுச்
சூழல் தாக்கம் மற்றும் பாரிய பாலமொன்றும் உடைந்துள்ளது.

அதிபர் தேர்தல் : ரணில் தொடர்பில் மகிந்த வெளியிட்ட அறிவிப்பு

உரிய நடவடிக்கை

இதற்கு முற்று முழுவதுமாக பொறுப்பு கூற வேண்டியவர் வட மேல் மாகாண ஆளுநராக
நியமிக்கப்பட்ட ஹாபீஸ் நசீர் ஆவார்.

குறித்த செயற்திட்டத்தினை முன்னெடுத்ததாக பதவி விலக்கப்பட்ட புவிச்சரிதவியல்
நிறுவனத்தின் தலைவர் கூட இப்போது குறித்த ஆளுநருடன் இணைந்துள்ளார்.இதனை ஒரு
போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.

என்னைச் சிறையில் அடைக்க சதி! – சு.க. ஆட்சி விரைவில் மலரும் என்கிறார் மைத்திரி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version