Home இலங்கை அரசியல் ரணிலின் அரசியல் எதிர்காலத்தை முடித்து விட்டார்கள் – லால்காந்த

ரணிலின் அரசியல் எதிர்காலத்தை முடித்து விட்டார்கள் – லால்காந்த

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் எதிர்காலத்தை முடித்து விட்டார்கள் என விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

ரணிலை பிணையில் விடுவிப்பதற்காக கூறப்பட்ட நோய்க்காரணிகள் அவரது அரசியல் எதிர்கலத்தை பூரணமாக அஸ்தமனமாக்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் என்பவர் அரசியலுக்கு பொருத்தமற்ற நோய் படுக்கையில் இருக்க வேண்டியவர் என்பது அம்பலமாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவிற்காக குரல் கொடுக்கும் நோக்கில் ஒன்றிணைந்துள்ள அரசியல்வாதிகளில் பலர் நாடு சீா்குலைவதற்கு பங்களிப்புச் செய்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதன் பின்னர் அதிகளவில் பதற்றமடைந்தவர்கள் ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்கள் என அமைச்சர் லால்காந்த குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டின் சட்டம் அவர்களின் பின்னால் செல்லும் என்பதை அறிந்து கொண்டதனால் அவர்கள் அனைவரும் தற்பொழுது ஒன்றிணைந்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version