ஜனாதிபதித் தேர்தலின் தோல்வியை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொள்ளும் நிலைப்பாட்டுக்கு வந்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
தொகுதியை கலைக்கும் உத்தரவு
அதன் பிரகாரம் தற்போதைக்கு அவர் தனது தனிப்பட்ட பணியாளர் தொகுதியை கலைக்கும் உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கலைக்கும் உத்தரவு
அதன் பிரகாரம் பெரும்பாலும் நாளை அல்லது மறுநாள் அவரது பணியாட் தொகுதியினர் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தங்கள் அலுவலகங்களை விட்டு வெளியேறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் சுமார் இருநூறு பேரளவிலான அலுவலகப் பணியாட் தொகுதியினர் கடந்த காலத்தில் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட உத்தியோகத்தர்களாக ஜனாதிபதி அலுவலகத்தில் பணியாற்றியிருந்தனர்.
தற்போது வரை வெளியான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளின் படி அநுரகுமார திசாநாயக்க 51.81% வாக்குவீதத்தில் முன்னணியில் உள்ள குறிப்பிடத்தக்கது.