Home இலங்கை அரசியல் அநுரவுக்கு எதிராக சட்ட சவாலுக்கு தயாராகும் முன்னாள் ஜனாதிபதிகள்

அநுரவுக்கு எதிராக சட்ட சவாலுக்கு தயாராகும் முன்னாள் ஜனாதிபதிகள்

0

இந்த வாரம் ஜனாதிபதி சலுகைகளை நீக்குவதற்கான மசோதா வெளியிடப்பட்ட சில
நாட்களுக்குப் பிறகு,
முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர்
கொழும்பில் சந்தித்து கலந்துரையாடிள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை இரத்துச்செய்வதற்கான யோசனை வர்த்தமானியில்
வெளியிடப்பட்டு நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

ஓய்வூதியம் 

இதன்போது குறித்த யோசனையை உயர்நீதிமன்றத்தில் சவால் செய்வதற்கான
சாத்தியக்கூறுகள் குறித்து அவர் விவாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 1986 ஆம் ஆண்டு எண் 4 ஆம் திகதி ஜனாதிபதி உரிமைகள் சட்டத்தை ரத்து
செய்யக் கோரும் ஒரு யோசனை,நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகத்தால்
கடந்த வியாழக்கிழமை (ஜூலை 31) வெளியிடப்பட்டது,
இதன் கீழ் அனைத்து முன்னாள் ஜனாதிபதிகளும் உத்தியோகபூர்வ குடியிருப்பு, செயலக
கொடுப்பனவுக்கான கட்டணம் மற்றும் உத்தியோகபூர்வ போக்குவரத்து மற்றும் பிற
வசதிகள் இரத்துச்செய்யப்படவுள்ளன.

இந்த யோசனை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டால், இலங்கையில் தற்போதுள்ள ஐந்து
முன்னாள் ஜனாதிபதிகள் தமக்கு மாதாந்தம் கிடைக்கும் ரூபாய் 97,500
ஓய்வூதியத்தைத் தவிர அனைத்து சலுகைகளையும் இழப்பார்கள்.

ஜனாதிபதிகள் அனுபவிக்கும் சலுகைகள்

இந்தநிலையில் குறித்த யோசனையை சட்ட சவாலுக்கு உட்படுத்துவதற்கு முன்னர்,
இந்தியா, பாகிஸ்தான், மாலைத்தீவுகள், பூட்டான் மற்றும் நேபாளம் உள்ளிட்ட பிற
பிராந்திய நாடுகளில் முன்னாள் ஜனாதிபதிகள் அனுபவிக்கும் சலுகைகள் தொடர்பில்;
ரணில் மற்றும் மைத்ரி ஆகிய முன்னாள் ஜனாதிபதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும்
சட்டக் குழு பகுப்பாய்வு செய்து வருகிறது.

இதேவேளை கடந்த ஆண்டு தேர்தல் பிரசாரக் கூட்டங்களின் போது, முன்னாள்
ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை நீக்குவது என்பது தேசிய மக்கள் சக்தி அளித்த
உறுதிமொழிகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version