Home இலங்கை அரசியல் ரணிலை சந்தித்த ஐ.எம்.எப்: பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் வெளியான தகவல்

ரணிலை சந்தித்த ஐ.எம்.எப்: பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் வெளியான தகவல்

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஸ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர் தலைமையிலான குழு, இன்று (18.11.2024) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, தமது எக்ஸ் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க, இலங்கையின் பொருளாதாரத்தை அதன் மோசமான நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கும் அதை அமைப்பதற்கும் முன்னாள் அரசாங்கத்தின் குறிப்பிடத்தக்க முயற்சிகள் இந்த சந்திப்பின்போது பாராட்டப்பட்டதாக கூறியுள்ளார். 

நீண்ட கால பொருளாதார வளர்ச்சி

இந்தநிலையில், கொள்கைகள் மற்றும் திட்டங்களில் தொடர்ச்சியைப் பேணுதல், கடின உழைப்பால் ஈட்டப்பட்ட சீர்திருத்தங்களைப் பாதுகாத்தல் மற்றும் ஸ்திரத்தன்மை மற்றும் நீண்ட கால பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை தமது தரப்பு வலியுறுத்தியதாக செஹான் குறிப்பிட்டுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version