Home இலங்கை அரசியல் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினரை சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினரை சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

0

Courtesy: Sivaa Mayuri

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினருடன் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.

ஆயர்கள் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹரோல்ட் அந்தனி பெரேரா மற்றும் செயலாளர் நாயகம் டொன் அன்டன் ஜெயக்கொடி, கொழும்பு உதவி ஆயர் உட்பட முக்கிய உறுப்பினர்களை சந்தித்து அவர் கலந்துரையாடினார்.

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தகவல்படி, கல்வி சீர்திருத்தங்கள், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் விசாரணைகள், சுற்றுச்சூழல் கவலைகள் மற்றும் தேவாலயம் தொடர்பான பிரச்சினைகள் போன்ற முக்கியமான தலைப்புகளில் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் திட்டங்கள்

இந்த சந்திப்பின் போது, ஜனாதிபதி விக்ரமசிங்க பொருளாதாரத்தின் தற்போதைய நிலை தொடர்பிலான புதுப்பிப்புகளை வழங்கியதுடன், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளை ஈடு செய்வதற்கான அரசாங்கத்தின் திட்டங்களையும் பகிர்ந்து கொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version