Home இலங்கை அரசியல் எங்களிடத்தில் விரோதம் இருக்கவில்லை! லொஹானுக்கு ரணில் அஞ்சலி

எங்களிடத்தில் விரோதம் இருக்கவில்லை! லொஹானுக்கு ரணில் அஞ்சலி

0

இரண்டு புறங்களில் இருந்து அரசியல் செய்திருந்தாலும் தங்களுக்கிடையில் தனிப்பட்ட விரோதம் இருக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மரணமடைந்த லொஹான் ரத்தவத்தவுக்கு அஞ்சலி செலுத்தும் போது தெரிவித்துள்ளார்.

கண்டி – மஹியாவையில் உள்ள லொஹான் ரத்வத்தவின் வீட்டில் வைத்து ரணில் இன்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அரசியல் எதிர்காலம்

அதனைதொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

“அந்தக் காலத்திலிருந்தே எனக்கு லோகன் ரத்வத்தேவைத் தெரியும். நாங்கள் இரு தரப்பிலிருந்தும் அரசியல் செய்தோம். ஆனால் எங்களுக்குள் தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை.

எனது ஜனாதிபதி காலத்தில் அவர் தோட்டத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். அந்தக் கடமைகளைச் சிறப்பாகச் செய்தார்.

அவருக்கு நல்ல அரசியல் எதிர்காலம் இருந்தது. ஆனால் விதி இப்படித்தான் செயல்படுகிறது.” என்றார்.

NO COMMENTS

Exit mobile version