Home இலங்கை அரசியல் இனவாதிகளின் கூடாரமாக ரணிலின் தலைமை: சஜித் தரப்பில் எதிரொலிக்கும் குரல்

இனவாதிகளின் கூடாரமாக ரணிலின் தலைமை: சஜித் தரப்பில் எதிரொலிக்கும் குரல்

0

இந்த நாட்டை ஊழல் மோசடிகளால் நாசம் செய்த கொள்ளையர்களையும் இனவாதிகளையும் பாதுகாக்கின்ற ஒரு கூடாரமாகவே ரணிலின்
தலைமை காணப்படுவதாக என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் எம்.எம் மஹ்தி தெரிவித்துள்ளார்.

திருகோணமலை (Trinco) – கிண்ணியாவில் உள்ள கட்சி கிளை காரியாலயத்தில் இன்று
(31) மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே இருக்கின்ற இந்த நேரத்தில் யாருக்கு
வாக்களிப்பது என்கின்ற தீர்மானத்தை மக்கள் எடுக்கப் போகின்ற இந்த நேரத்திலே
ஒரு மும்முனைப் போட்டி இருப்பதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

கடன் சுமை

ரணில் விக்கிரமசிங்க அவர்களை பொறுத்தவரை இந்த நாட்டை மீட்டு விட்டேன். போலின்
யுகத்தை நிறுத்திவிட்டேன். பொருட் தட்டுப்பாடுகள் இல்லை. என்கின்ற கானல் நீர்
கதைகளை பேசுவதன் மூலம் தானே நிகரில்லா தலைவன் எனும் மாயையை காட்ட முனைகின்றார்.

இந்த நிலைமையை சீர் செய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்திடமும் ஆசிய அபிவிருத்தி
வங்கியிடமும் பாகிஸ்தான், பங்களாதேஸ், இந்தியா போன்ற நாடுகளிடமும் அதிக பணத்தை
கடனாக பெற்று கடன் சுமையை மேலும் அதிகரித்து சாதித்து இருக்கின்றார்.

இக்கட்டான நிலை

கடன் மேல் கடன் படுகின்ற போது அதனை மீளச் செலுத்த முடியாத ஒரு இக்கட்டான நிலை
ஏற்படுவதோடு எமக்கு சொந்தமான அரச நிறுவனங்களை, காணிகளை வெளிநாடுகளுக்கு வழங்க
வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படுகிறது.

இவ்வாறே இலங்கை பெட்ரோலியம் டெலிகொம் போன்ற நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு அடாத்தாக வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன.

இது உண்மையான மாற்றமோ அபிவிருத்தியோ அல்ல. இந்த நாட்டை ஊழல் மோசடிகளால் நாசம்
செய்த கொள்ளையர்களையும் இனவாதிகளையும் பாதுகாக்கின்ற ஒரு கூடாரமாகவே ரணிலின்
தலைமை காணப்படுகின்றது. ” என்றார்.

NO COMMENTS

Exit mobile version