Home இலங்கை அரசியல் சஜித் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகும் ரணில் கட்சி

சஜித் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகும் ரணில் கட்சி

0

எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டு
நிர்வாகங்களை அமைப்பதற்கான
பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்
செயலாளர் தலதா அதுகோரல(Thalatha Atukorale) தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்க்கட்சி பெரும்பான்மையாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளில்
நிர்வாகங்களை அமைப்பதற்காக, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பிற கட்சிகளுடன்
பேச்சுவார்த்தையில் ஈடுபட தாங்கள் தயாராக உள்ளதாக, அதுகோரல செய்தியாளர்களிடம்
கூறியுள்ளார்.

ரணில் கட்சி

ஆளும் தேசிய மக்கள் சக்தி தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருவதால், அதை
அதிகாரத்திலிருந்து வெளியேற்றுவதே தங்கள் நோக்கம் என்றும் அவர்
தெரிவித்துள்ளார்.

தாங்கள் எப்போதும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பணியாற்றத் தயாராக
இருந்ததாகவும் தாமும், கட்சியின் துணைத் தலைவர் ருவான் விஜேவர்தனவும் சிறிது
காலத்திற்கு முன்னர் அவர்களுடன் உரையாடலை நடத்தியதாகவும் தலதா கூறியுள்ளார்.

அந்த செயல்முறையை இப்போது மீண்டும் ஆரம்பிக்கலாம் என்றும் அவர்
தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version