Home இந்தியா இந்தியாவின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதா பாகிஸ்தான்..!

இந்தியாவின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதா பாகிஸ்தான்..!

0

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஒபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில், பாகிஸ்தானில்(pakistan) இந்திய இராணுவம்(indian army) நேற்று செவ்வாய்க்கிழமை(06) நள்ளிரவு தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலை அடுத்து இந்தியாவின் ஐந்து போர் விமானங்களை தமது இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

முற்றாக மறுத்துள்ள இந்தியா

எனினும் பாகிஸ்தானின் இந்த அறிவிப்பை இந்தியா முற்றாக மறுத்துள்ளது.

இதுதொடர்பாக, இந்திய மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழுவினர் தெரிவிக்கையில்,

“பாகிஸ்தான் ஆதரவாளர்களால் பகிரப்படும் பழைய புகைப்படங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

இணையதளத்தில் பகிரப்படும் புகைப்படம், கடந்த 2021 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் விபத்துக்குள்ளான மிக் – 21 விமானத்தின் படமாகும்.

ஒபரேஷன் சிந்தூருக்கும் பழைய போர் விமானத்தின் புகைப்படத்துக்கும் தொடர்பில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.       

                    

NO COMMENTS

Exit mobile version