Home இலங்கை அரசியல் வடக்கில் ஆரம்பமான தமிழ் தேசியக் கட்சிகள் – தொழில் சங்கங்களின் மே தின நிகழ்வுகள்

வடக்கில் ஆரம்பமான தமிழ் தேசியக் கட்சிகள் – தொழில் சங்கங்களின் மே தின நிகழ்வுகள்

0

வடக்கு மாகாணத்தில் மே தின நிகழ்வுகள் தற்போது ஆரம்பமாகியுள்ள.

அரசியல் கட்சிகள் மற்றும், தொழிலாளர் சங்கங்கள் பல்வேறு விதமாக தமது மேதின நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன.

தேசிய மக்கள் சக்தி

நாட்டை கட்டியெழுப்பும் தீர்வுக்கு மக்கள் சக்தி ஓரணியில் திரள்வோம் என்ற
கோஷத்துடன் தேசிய மக்கள் சக்தியின் மேதின கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.

கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரம் தலைமையில் யாழ்ப்பாண
மத்திய கல்லூரியில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இன்று காலை 10
மணிக்கு கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மற்றும் தேசிய மக்கள்
சக்தியின் உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பின் தலைவி சரோஜா சாவித்திரி குகராஜ் மற்றும் பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

ஐனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி

ஐனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் மே தினக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று (01.05.2024) காலை
நடைபெற்றுள்ளது.

குறித்த கூட்டமானது, இந்த மே தினத்தை தமிழ்த் தேசிய மே நாளாக
பிரகடனப்படுத்தி இலங்கை அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக அணி திரள்வோம்
என்ற தொனிப் பொருளில் மானிப்பாய் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் கூட்டணியின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்க
அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியற் பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் எனப்
பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தி – தீபன் மற்றும் கஜிந்தன்

கிளிநொச்சி

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தலைமையில் நடைபெற்று வருகின்றது.

செய்தி – யது

யாழ்ப்பாணம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வு யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச
சபையின் பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது “அரசின் அடக்குமுறைகளை
உடைத்தெறிவோம்” என்னும் தொனிப்பொருளில் இன்று (01.05.2024) இடம்பெற்றுள்ளது.

அதிரடிப்படையினரின் கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ள கொட்டகலை நகரம்

விருந்தினர்களின் உரைகள்

நிகழ்வானது மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானதுடன் அதனைத்
தொடர்ந்து தலைமை உரை, விருந்தினர்களின் உரைகள் என்பன இடம்பெற்றுள்ளன.

மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான செல்வியின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம்
சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்
பிரேமச்சந்திரன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், வடக்கு மாகாண
சபையின் முன்னாள் உறுப்பினர்களான சபா குகதாஸ், கஜதீபன், ரெலோவின்
பேச்சாளர் குருசாமி சுரேந்திரன், முன்னாள் பிரதேச சபையின் உறுப்பினர்கள்,
கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் மேதினம்

தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் “நாட்டைக் கட்டியெழுப்பும் தீர்வுக்கு
ஓரணியில் இனம், மதம், சாதி, பேதம் இல்லாத புதிய சுதந்திர போராட்டத்திற்காகப்
போராடுவோம் என்னும் கருப்பொருளிலான மேதின கூட்டம் இன்று யாழ்ப்பாணம் தந்தை
செல்வா கலையரங்கில் இடம்பெற்றுள்ளது. 

இதில் தேசிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழுவின் உறுப்பினரும் யாழ்ப்பாண
மாவட்ட பிரதான அமைப்பாளருமான இ.சந்திரசேகரம், மதத்தலைவர்கள், மகளிர் அமைப்பின்
செயற்பாட்டாளர்கள், மாவட்ட, பிரதேச ஒருங்கிணைப்பாளர்கள்,தோட்டதொழிலாளர்கள், தேசிய மக்கள் சக்தியின் மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

செய்தி – கஜி

யாழ்.போதனா வைத்தியசாலை மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு: மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கை

ஆசிரியர் சங்கத்தின் மே தின பேரணி 

மேலும், யாழ்ப்பானத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மே தின பேரணி யாழில் இடம்பெற்றுள்ளது.

ஆசிரியர் சங்க தலைவர் ஜோஸப் ஸ்டார்லின் தலைமையில் குறித்த பேரணியானது இடம்பெற்றுள்ளது.

செய்தி – தீபன்

வவுனியா

மேலும், தற்போது வவுனியாவில் புதிய ஜனநாயக மாக்சிய லெனினிசக் கட்சியின் மேதின தொடரணியானது ஆரம்பமாகியுள்ளது.

வவுனியாவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் மே தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

செய்தி – திலீபன்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version