Home இலங்கை அரசியல் யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னன் மிகவும் அதிர்ஷ்டசாலி! ரணில் கூறும் தகவல்

யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னன் மிகவும் அதிர்ஷ்டசாலி! ரணில் கூறும் தகவல்

0

யாழ்ப்பாணத்தை(Jaffna) ஆண்ட மன்னன் மிகவும் அதிர்ஷ்டசாலி. அவரிடம் யானைகளும் முத்துகளும் இருந்தன. ஆனால் கறுவா தொழிலில் தனக்கும் ஒரு பங்கு இருக்க வேண்டும் என்று நினைத்தார். அதன்படி புத்தளத்தை கைப்பற்றி அங்குள்ள ஆட்சியாளர்களிடம் கப்பம் வாங்கினார் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். 

கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நேற்று (28) இடம்பெற்ற டில்மா சினமன் வர்த்தக நாமத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.  

தொடர் வீழ்ச்சியைக் காணும் அமெரிக்க டொலர்

முன்னோக்கி கொண்டுச் செல்லப்பட்ட நாட்டின் பொருளாதாரம்

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

கறுவாப் பயிர் விவசாயம் அக்காலத்தில் நம் நாட்டின் முக்கிய பயிராக இருந்தது. பொலன்னறுவை இராச்சியம் வீழ்ச்சியடைந்த பின்னர், தென்மேற்கு ஈரவலயப் பிரதேசத்திற்கு எமது இராச்சியங்கள் இடம்பெயர்ந்த போது, கறுவாத் தொழில்தான் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டுசென்றது.

எங்களிடம் கறுவா இல்லை என்றால் தம்பதெனிய, யாப்பஹுவ, கம்பளை, ரைகம, கோட்டே ஆகிய இராச்சியங்கள் தோன்றியிருக்காது. இப்படித்தான் கறுவா நம் நாட்டின் வரலாற்றோடு இணைக்கப்பட்டுள்ளது.

இவர்களில் யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னன் மிகவும் அதிர்ஷ்டசாலி. அவரிடம் யானைகளும் முத்துகளும் இருந்தன. ஆனால் கறுவா தொழிலில் தனக்கும் ஒரு பங்கு இருக்க வேண்டும் என்று நினைத்தார்.

அதன்படி புத்தளத்தை கைப்பற்றி அங்குள்ள ஆட்சியாளர்களிடம் கப்பம் வாங்கினார். ஆனால் அது போதாது என்று

எண்ணி வர்த்தகத்தை கட்டுப்படுத்த முடிவு செய்தார்.

அதன்படி அவர் அங்கிருந்து ரைகம மற்றும் கோட்டே இராச்சியங்களைக் கைப்பற்றினார்.

வியாபாரத்தை கட்டுப்படுத்திய கேரள வியாபாரிகள், இவரை இப்படியே தொடர விட முடியாது என நினைத்தனர்.

எனவே அவர்கள் ஒரு கோட்டையைக் கட்டி, ஆர்ய சக்ரவர்த்தியை தோற்கடிக்க தங்களில் முதன்மையான அழகேஸ்வரரை இங்கு அனுப்பினார்கள். எனவே இது நமது வரலாற்றின் மற்றொரு பகுதி.

ஆறாம் பராக்கிரமபாகு மன்னன் கறுவாத் தொழில் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடியவன் என்பதாலேயே மலையக இராச்சியத்தைக் கைப்பற்றியதாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த இராச்சியத்தின் அதிசயம் செலலிஹினியில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

போர்த்துக்கேயர்களுடன் போரிட்ட சீதாவக்க ராஜசிங்க மன்னன், போர்த்துக்கேயரை மலையகக் கோட்டைக்குள் மட்டுப்படுத்தினான்.

கொழும்பு கோட்டை மற்றும் நீர்கொழும்பு கோட்டையையும் அவன் கைப்பற்றினான்.

அவரது இராச்சியத்திலும் கோட்டே இராச்சியத்திலும் சேகரிக்கப்பட்ட அனைத்து கறுவாவும் அவருக்குக் கீழ் வைக்கப்பட்டன. பின்னர் அந்த அனைத்திலும் உயர்தர கறுவாவை மட்டும் விட்டுவிட்டு, தரம் குறைந்த கறுவா அனைத்தையும் எரித்துவிட்டார். இந்த வகையில், கறுவா தொழில் எங்கள் இராச்சியங்களுடன் இணைக்கப்பட்டது.

மேலும், மலையக இராச்சியத்தை பராமரிப்பதற்கான பணம் கறுவா தொழிலில் இருந்து கிடைத்தது. ஆனால் கறுவாவுக்குப் பதிலாக கோபி, டீ என்பன வந்ததால், கறுவாவின் விலை வீழ்ச்சியடைந்ததோடு மொத்த நிலையும் மாறியது.

ஆனால் இலங்கை கறுவா உலகிலேயே சிறந்த கறுவா என்ற அங்கீகாரம் இன்னும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.  

இலங்கையில் வெற்றிகரமாக நடந்த அரிய சத்திரசிகிச்சை

நகை வாங்க காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version